Monday, November 17, 2014

ஒரு பொழுது விடிகிறது

ஒரு பொழுது விடிகிறது



முகாம்களில் முகம் தெரியா
எம் குடிசைகளின்
வாயில் வழியே
ஒரு பொழுது விடிகிறது

எம் கூரைக்கிழிசல்களுக்குள்
ஆங்காங்கே சிறு வெளிச்சங்கள்
எம் பெண்கள் சேலையிலும்….
அது வெளிச்சமல்ல
ஒரு வரலாற்றின் ஆதாரம்

முக்காடிட்ட முகாம்களுக்குள்
எம் மூதாதையர்கள்
காற்றும் கூட
அங்கு திசை மாறுகிறது…
வெறிச்சோடிப்போன
ஒரு பொழுது……….

அலைக்கழிக்கப்பட்டோம் ஐயா!!
“அகதி” என்ற போர்வையில்……..
அழுகின்றோம் ஐயா!!
ஊர்கள் இல்லாமல்
வியர்வையில்……….

யோகம் வரும் என்பதினால்
மோகம் கொள்ளவேயில்லை
மோகம் கொள்ளவுமில்லை
இங்கு யோகம் வரவுமில்லை

ஒற்றைக் கூரையில்
ஓர் விளக்கு
காற்றும் சுற்றுது
அதையும் அணைக்க

பட்டெரிய நாங்களொன்றும்
பாவிகள் இல்லை
பாவப்பட்டவர்கள்
பரிதவிக்கும் எங்களிடம்
அகோரக் கேள்விகள்

வீழ்ந்த செல்களில்
சிதறியது எம்முயிர் ….
ஆழ்ந்த துயரங்களில்
பதறியது எம்மனம்….
சேர்ந்துகொண்டோம் சோர்வதற்கு

வால் வெள்ளியான வாழ்க்கை…
“வாழ்ந்து கெட்டவர்” என்ற நாமம்
கார்மேகமும்
குண்டு மழை பொழிகிறது…
இரும்புத்தொப்பிகளும்
உலோகப்பறவையின்
குண்டு எச்சங்களும்
சித்திரவதை செய்கிறது

கப்பம் என்ற பெயரில்
கர்ப்பம் தரிக்க வைத்தனர்
அழுகின்ற குழந்தைக்கு
ஒரு “புல்லட்” போதும் என்கின்றனர்

படிக்கப்போனவர்கள்
பள்ளியோடு படுத்துறங்கினர்
மிஞ்சிய உயிர்களெல்லாம்
உதறியோடுகின்றன

அகதி என்ற பெயர் வைத்தே
அதிகாரம் பண்ணுகின்றனர்
ஆத்திரமடைந்தால்
போதும்
ராத்திரிக்குப்போட்டுத்தள்ளுவர்

காத்திரமாய் நானும்  தான்
கண்டதில்லை யாரும் தான்
பாத்திரமாய் இருக்கத் தான்
விட்டதில்லை யுத்தம்  தான்

சோற்றுக்காய் உப்பேதும்
வாங்வில்லை நாமும் தான்
ஒரு கை சோற்றுடன்
துளிக்கண்ணீர் போதுமென்ற
நோக்கம் தான்

பட்டாடை வேண்டுமென்றால்
பத்தாடை வாங்க வேண்டும்
பட்டு மாண்டபின்பெமக்கு
பசிக்க மட்டும் செய்கிறது

“அடுத்தது என்ன?” என்று
நேற்று நினைத்தே இன்றானது
நாளையை நினைக்க என்க்கு
நாழிகை வருமா
என்றானது

இந்தக்காற்றும் எம்பக்கம் வீசும்
போலிருக்கு
கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கை தானிருக்கு
வீண்கோபம் இனி ஏன் எனக்கு
கைகொடுக்க உற்றவர் பேரிருக்கு

ஒருசத சல்லியேனும்
சேர்த்து வைக்க முடியவில்லை
வயது வந்த பாவைக்கு
நல்ல சேதி அருகிலில்லை


இத்தனையும் எம் கண்களில் வந்து
தூங்காத எம் நாட்களாக
ஒரு பொழுது விடிகிறது
ஒவ்வொரு நாளும் அது தொடர்கிறது

தொடர்கின்ற இவ்வலி
நினைத்தே நாம்
செல்கின்ற பாதை மறந்தோம்
வருகின்ற காலத்தினுள்
எம் வாழ்வைத் துறப்போம்

Monday, April 21, 2014

திண்ணம்

வாழ்க்கை முழுவதும் முற்கள்
தைக்கும் கால்களுக்குள்ளும்
இரத்த காவியங்கள்
காதலாய் மலர்ந்தது எனக்குள்

பார்த்ததும் படபட வென
பரிதவித்தது இந்த
பாவி நெஞ்சம்
பார்த்தேன் பாசம் தூவிய
பார்வையாலே

என்னது நியாயம்
பொன்னது போல
பெண்ணது நெஞ்சம் மட்டும் கிடைப்பது
திண்ணம் என்றானதே..................

Saturday, November 30, 2013

எய்ட்ஸ்

எய்ட்ஸ்

எய்ட்ஸ் (Acquired immune deficiency syndrome or acquired immunodeficiency syndrome) நோய் எச்..வி (Human Immunodeficiency Virus) என்ற கிருமிகளால் உண்டாகிறது. இந்த நோய் உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பை மாற்றி, தொற்று மற்றும் பிற நோய்களால் சீக்கிரமே பாதிக்கப்படும் நிலையை உண்டாக்குகிறது. மேலும் இது நோயின் தன்மையை சீக்கிரமே அதிகரித்து விடும்.

அறிகுறிகள் சில

காய்ச்சல்

சோர்வு

தலைவலி
சரும அரிப்பு சரும சிராய்ப்புகள் 

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு 

எடை
வறட்சி இருமல் 

அதிகமாக வியர்த்தல்

நகங்களில் மாற்றம்

வாய்ப்புண் 

அறிவுத்திறன் குறைபாடு

பிறப்புறுப்பு புண்கள் 

கைக்கால் மரத்து போதல்

முறையற்ற மாதவிடாய்

இவை தென்பட்டால் கட்டாயம் மருத்துவரை நாடுங்கள்.




Friday, November 29, 2013

???????????????????

நீ துப்பிய 
நீர்ச்சாரலில்
நீந்தும் மீனின்
வேகம் கருவறுத்து
காயவைத்து
மண்ணில் மீண்டும்
பிறக்கச்செய்ததேனோ

Monday, September 30, 2013

சிறுவர் தினம்

சிறுவர் தினம்
கொண்டாட அருகதை
இருக்கிறதா நமக்கு?

தலைவா நீ
நினைவாக எடு
இளையான் கூடு
கரைந்த கதையை

இன்றே விழித்திடு
சிதறும் சில்லறைகளாக
கதரும் நம் மவர்கள்
தினம் வேண்டுமா?

அறும்பு மீசையாய்
அகத்தில் அவதிகள்
முளைக்கிறது
இந்த அவனியில்

எத்தனை பிஞ்சுகள்
பிணங்களாக
பிரளயங்கள் நடுவே
நீத்த உயிர்கள்....

தினம் எதற்கு உனக்கு?
கல்வியே காட்டாத நீ
தோல்வியே யளித்த நீ
வேல்வியில் தின மெதற்கு

சிறுவர் தினம் தேவையில்லை
சிந்தையை தூசு தட்டு
பெரியைதை அள்ளி யெடு
உயிரதை திரும்பக் கொடுத்து விடு

யாருக்கிந்த தினம்?
கொன்று குவித்த பிள்ளைக்கா?
காமத்தீ பட்ட பிஞ்சுக்கா?
உங்கள் இன்பங்களுக்கா?

தேவைதானா இந்த தினம்?
நீ மதித்து நட
தோட்டாக்களுக்கும் அதை
சொல்லி நட

நான் என்ன
நீ போலா?
இரத்த சாரலில்
பிஞ்சு மனம் தடவ

நான் என்ன நீ போலா?
வாழவே யுரிமை மறுத்து
பசியிலாழ்த்தி
வாழ்த்துச்  சொல்ல

நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை
நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை

Sunday, September 29, 2013

நம்பிக்கை துரோகம்










துரோக துயரங்கள்
துச்சம் பலர் நமக்கு
துளசிச் செடி கூட கடன் கொடுத்தும்
துன்பங்கள் எத்தனை

அடுத்த வீட்டு
அன்னையாய் நீ யிருந்தும்
அநாதையாய் நா மிருந்தும் நாம் பட்ட
அவஸ்தைகள் எத்தனை?

எங்கள் கதி யுணர்ந்த
எத்தனை பேருளனர்
எந்தை மட்டுமிருந்தால்.......
எமக்கெதுக்கு நீ...

விழுந்த செல்களில்
விதைந்த தெங்கள் கவலை
விளைச்சல் அமோகமென
விளைகிறது கண்ணீர்....

கொண்டவன்
கொன்றவன்
கோ வெல்லாம்
கோமாளிகள்

துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
எதிர் வீட்டு இனவாதி
செய்ததின்த துரோகம்

அடைக்கலம் தந்திருந்தால்
அனைக்க அன்னை இருந்திருப்பாள்
அவள் ஆத்மா கூட அழுது புலம்பும்
அள்ளி கொடுத்த உதவிகளுக்காய்

காட்டிக் கொடுத்துவிட்டாய்
சாட்டி விட்டுவிட்டாய்
ஏட்டில் பதிந்துவிட்டோம்
நாட்டில் வாழ்வதில்லை யென

போகிறோம்
எங்கோ போகிறோம்
மனிதபிமானமுள்ள
மனிதர்களைத் தேடி....

Thursday, September 26, 2013

எனக்கான நான்

எனக்கான நானே
நமக்காக ஆனபோது
எதுக்காக ஏனென
எத்தனபேரு கேட்டதுண்டு

அத்தன கதகளையும்
அடக்கி விட்டு
நான் வந்தேன்
நமக்கான நாமாக

சித்திரைக்கி
வாங்க மச்சான்
கல்யாண கதபேச
முத்திரையாய் தாலிய
தந்து விட்டு போங்க மச்சான்
என்றாயே..


இங்கிலீசு நாகரீகம்
எங்கிருந்து வந்ததிங்கே
நீ வானம் போவென்று
மெல்லியதாய் சொன்னதேனோ

கலியாணக்கனவுகளில்
மிதந்ததோ நானிங்கு
வெளிநாட்டு மாப்பிள்ளை
சென்ஜ கொடுமய பாருங்கோ..

நானென்ன போக்கத்தவானா?
போங்கடி போங்க
பொழுது வரும் எங்களுக்கும்
திரும்பிமட்டும்
வந்துராத

இப்போ
நமக்கான நான்
எனக்கான நானாகி
நகருகிறேன்
தனியாகி

Friday, September 13, 2013

பிரிவு

உன் பிரிவு
நம் காதலுக்கான
முதலீடு என
எண்ணிக்கொண்டு
சேமிக்கிறேன்
கண்ணீரையும்
தவிப்புகளையும்
நீ மீண்டும்
என்னிடம் வரும் வரை................

Wednesday, May 29, 2013

காதல் அநாதை

எனக்குள் உருவாகி
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி

நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி

அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது

வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு

ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........

எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....

ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்

நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்

Wednesday, May 22, 2013

விக்கி பீடியாவிலிருந்து


  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல இருந்தால் பகையும் உறவாம்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
  • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடிக்கிற கைதான் அணைக்கும்!
  • அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
  • அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  • அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
  • அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  • அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
    • இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
    • குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
  • அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
  • அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே
  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  • அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
  • அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  • அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  • அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
==ஆ= 
  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
    • இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
    • ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
  • ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
  • ஆனைப் பசிக்கு சோளப் பொரி
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
  • ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
  • ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
  • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
  • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

Wednesday, May 15, 2013

மனவெளியின் பிரதி




கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் எழுதிய “மனவெளியின் பிரதி“ என்ற கவிதைத்தொகுதி முகப்பு அட்டையே மேலுள்ள படமாகும். இதில் கவிஞர் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான சமூக பின்னூட்டல்களோடும் மதம், மரபு, சம்பிரதாய நேரடித்தாக்கங்களோடும் வரிகளை வடித்து இன்று அதனை உயிர்பெறச்செய்துள்ளார்.  கவிஞர் மேமன் கவியின் ஈடுபாடும் கவிஞர்களுக்கிடையிலான கவியொற்றுமையும் தெளிவாகிறது இந்த தொகுப்பிலிருந்து. முன் அட்டை வடிவமைப்பாளரும் அவரே. கொடகே சகோதரர்களால் இப்புத்தகம் வெளியிடப்படுகின்றமை மிக முக்கிய அம்சமாகும். வெகு விரைவில் வாசகர்கள் கைகளிற்கு இப்புத்தகம் கிடைக்கப்பெறும்........

Sunday, May 12, 2013

தாஜ்மகால்...



முகலாயன் விட்டுச்சென்ற 
கடைசி எச்சம்......
மும்தாஜ் இனால் உணரப்படாத
ஸாஜஹானின் இதயம்.....

இமைத் திரைகளுக்குப்பின்னால்
இமைக்காமல் வடித்த 
இன்னொரு காதல் சின்னம் இது

அந்த பளிங்குக் கற்களுக்குள்
உறைந்திருக்கும் உன் இதயத்துடிப்பை
யார் அறிவார் ஸாஜஹா?

உலகம் வியக்கும் 
இந்த பளிங்கு மாளிகை
கைகளுக்குள் அடக்கி
காம வேட்டைக்கான ஆயுதமாக்கியதை 
நீயறியாயோ.....

யமுனையாற்றின்
படுக்கை....
சூரியனின் செம்மொளி- பட்டு
மின்னுது பார் மன்னனின்
மறைமுகைக் கண்ணீர்த்துளிகள்

சிற்பிகள் வடித்தது
மாளிகையல்ல
முகலாயனின் முகத்தில் 
உதிர்ந்த காதலை

உலகமறிந்த உன் காதலை 
உணராமல் இன்னும்
அவள்  கல்லறையில் ...


இது கட்டிடமல்ல
மரணம் எழுதிய
உயிர்ப்பு.....

Sunday, May 5, 2013

நேகம பஸான்: மனிதம் எங்கே?

நேகம பஸான்: மனிதம் எங்கே?: நீ மனிதன் என நான் உணரும் தருணம் மனிதம் தொலைந்துவிட்டது..... இருள் கலைந்து ஒளிபிறக்குமென ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது பு...

மனிதம் எங்கே?



நீ மனிதன் என நான் உணரும் தருணம்
மனிதம் தொலைந்துவிட்டது.....
இருள் கலைந்து ஒளிபிறக்குமென
ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது
புலராமல் மறைந்துவிட்டது....

எத்தனை தலைகள் தலைமைகள்?
அத்துணை விலைகள் அவர்களுக்கு
செத்தனை கொன்றுதான் புகழாரம்  அவர்களுக்கு
இங்கு எத்தனை எத்தனை உதிரமுறைந்திருக்கு

வாள் பேச்சிப் பேசியே நீ
வாய்ப்பூட்டாய் ஆனாய் நீ
தாய் மறைந்த துயரிலே
இன்னும் மீளாமல் ஆனாய் நீ

சவால்கள் விட்டவன் நீ
சாதித்துக் காட்டியவன் நீ
சாகடிக்க நினைத்தபோதும்
சாக்கடை நிதியில் புரழாதவன் நீ

நீ மேதையல்ல ஆனால்
எங்களுக்கு மேலானவன்
பண போதையுமல்ல நீ
பாச மிகு தலைவன் நீ

இன்னொரு அஷ்ரப் ஆனாய் நீ
பின்னொரு காலம் உனக்காய ஆகும் பார்
என்றொரு எண்ணம் உள்ளது எனக்குள்
திண்ணமது என  உள்ளேன் திடமாய் நானும்

ஜனநாயகம் இங்கே மலிந்து விட்டது
தனியாளும் இங்கே உலகாழும் என்னறாகிவிட்டது
தொட்டது தானும் பொன்னாகனும் இங்கே
நாங்கள் நட்டது கூட அழிந்தாகனும் அவர்களுக்கு

ஏழை மழைச்சாரலிலே நனைந்தால் போதுமெமக்கு
பனிமழைப் பந்தலிலே உறங்கனுமாம்     தலைகள்
பார் நாம் வெல்லும் காலம் வரும்
சிந்தும் கண்ணீர் கடலாய் மாறும்

வாழ்த்துகிறேன் சாலியே
திடமாய் இரு
மீதமுள்ள மனிதங்கள்
எப்போதும் உன் கூடவிருக்கும்

                                                                                       -------------நேகம பஸான்-----------------


Thursday, April 25, 2013

வாழ்க்கை

வாழ்க்கையின் யதார்த்தம் யாதாக இருப்பினும் மனிதம் வாழ வேண்டுமானால் மனிதன் இசைவாக்கமடைந்துதான் ஆகவேண்டும்.


படவரைகலையியல் நூல்

வெளிவந்தவிட்டது.. புவியியல் மாணவர்களுக்கான படவரைகலையியல் புத்தகம் வெளிவந்து விட்டது.... 

A/L, GAQ, BA மாணவர்களுக்கானது

ஆசிரியர்  - பஸான் அப்துல் அஸீஸ் 
(BA (hons) sp. in Geog, Dip. in English, Dip. in Computer Science, Dip. in Disaster Management ....)

விலை- 150 ரூபா

தொடர்புகளுக்கு 0777074959, 0713221412



இந்தப்படங்கள் பிடிச்சிருக்கா ?

இந்தப்படங்கள் பிடிச்சிருக்கா ?








Thursday, April 18, 2013

நியாயம்

காதல் செய்ய
அன்பு போதுமாம்?????????????????????????????

கல்யாணம்
பண்ண வீடு, வாகனம்
வேணுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதை சொன்னா
மட்டும் மூக்கு செவக்குமாம்..........................
என்னடா நியாயம் இது??????????????????????

Wednesday, April 3, 2013

நாள்

நேற்றைய நாளின்
இன்றை தொடர்ச்சி
இன்னும் ஒரு நாளின்
ஆரம்பம்

Tuesday, March 26, 2013

நான் சிறுபிள்ளை

கவிதைத் தாயின்
மடியில் தவழும் நான்
இன்னும் சிறு
குழந்தை தான்

Saturday, March 9, 2013

கனவுக் காதலி

நான்
கனவுகளை
காதலிக்கின்றேன்


காரணம்
என் கனவுகள்
நிஜத்தை விட
இனிமையானது
என்பதனால்

Friday, March 1, 2013

அமிழும் கண்கள்

கண்ணாடி  வளையல்
காகிதம் தான் பெண்ணே
முன்னாடி நீ நிற்பது
கண்ணாடி தான் கண்ணே

Sunday, February 24, 2013

கெகிராவ ஸஹானாவுடன் சில நிமிடங்கள்....

        இன்று (23.02.2013) வழமைபோல எனது புவியியல் வகுப்புக்களை முடித்துவிட்டு  விடுதியிற்குத் திரும்பும் வேளை , கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்        யாத்ராவின் 22ம் இதழ் ஒன்றைத் தந்து முக்கியமான ஒருவரிற்கு அதனை ஒப்படைக்கும் படி வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்தது. அந்த முக்கிய நபர் யார் என்றால்,  எனது கவிதைத் தாய்களில் முக்கியமானவர். அநுராதபுரம் கலை இலக்கியத் தூண்களில் மிகவும் முக்கியமானவர். அவர் தான் கெகிராவ ஸஹானா என்ற  பெண் (பொன்) இலக்கியவாதி.

        என் நீண்ட நாள் ஆசை அவரை சந்தித்து அவரிடம் எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் அவரின் மூலமாக எனது கவியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று......

        அவரின் வீட்டினை அடைவதில் எனக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. காரணம் அகன்று உயர்ந்த ஒரு வீடாயைால் கனப்பொழுதில் அடையாளம் கண்டுவிட்டேன். தயக்கத்துடன்  கோலிங் பெல்லை அடித்தேன். ”யாரு?” என்றதுகள் அவரின் அழகிய பிஞ்சுகள். ”ஸஹானா டீச்சர் இருக்காங்களா ?” என வினவினேன். ”ஆம்” என்று உள்ளே அழைத்து அமரச்செய்தார்கள் அந்த பிஞ்சுகள்.

      அப்போதுதான் அநுராதபுரத்தில் பல இலக்கியங்களைப் படைத்த தற்பெருமை என்பன சிறிதும் இன்றி எளிமையான தோற்றத்தில் வந்தார் கெகிராவ ஸஹானா.அநுராதபுரத்தில் பின்தங்கிய காலத்தில் இலக்கியத்தினை தாங்கிப்பிடித்து அதற்கு வலுவூட்டியவர்களில் ஒருவராகத்திகழும் இவர் மூத்த எழுத்தாளராக வலம் வருவதற்குக் காரணம் அவரின் பணிவும் தன்னடக்கமுமாகும். இவரிடம் நான் கண்ட ஒரு உண்மை என்னவெனில் அநுராதபுரகால இலக்கிய மேம்பாடு , பின்னடைவு என்பன பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர். அவரோடு நீண்ட நேரம் உரையாடக்கிடைத்தது. அவரின் படைப்புகள் தொடர்பாக நான் அவர் சொல்லக் கேட்ட சில விடயங்கள் என் மனதில் பதிந்தது. அது,

            அநுராதபுர மாவட்டத்தில் மரதன்கடவல என்ற இடத்தில் பிறந்த அவர் அ.கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத்  தொடர்ந்தார். பின்பு அப்பாடசாலையிலேயே க. பொ.சா.தரம் வரை பயின்று விட்டு உயர்தரத்திற்காக கம்பளை ஸாஹிராவிற்குச்சென்றார். பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார்.

        அவரின் முதல் கவிதையான ”மழை” அப்போது வானொலி அறிவிப்பாளராக இருந்த பீ.எச். அப்துல் ஹமீட் அவர்களினால் ”ஒலி மஞ்சரி” யில் வாசிக்கப்பட்டது.. இதன் பின்பே அவர் கால் தடம் அதிகமாக பதிவாக ஆரம்பித்தது. அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு கவிதாயினியின் அவர்களின் முதல் சிறுகதைத்  தொகுதியான ” ஒரு தேவதைக் கனவு” வெளிவந்தது. அதன் பின்னரான அவரது இலக்கிய வாழ்வு வித்தியாசத்தை உணர்ந்தது. அத்தொகுப்பிற்குக் கிடைத்த வரவேற்பே இதற்குக்  காரணம்.

           பின்பு ஐந்தாண்டுகள் கழித்து 2002 ம் ஆண்டு ”இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து 2009 ம் ஆண்டு முதல் குருநாவல் ” ஒரு கூடும் இரு முட்டைகளும்” என்ற தலைப்பில்  வெளிவந்தது. இவை ஒவ்வொன்றின் மூலமாகவும் இவரை் இலக்கிய உலகில் புது தடம் பதித்துவிட்டார் என்றே கூறவேண்டும். அடுத்து 2010ம் ஆண்டு ” சூழ ஒடும் நதி“ ஜெயகாந்தன் படைப்புக்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. அதுவரையில்  ஜெயகாந்தன் பற்றி எந்த புத்தகங்களும் வெளிவந்திருக்கவில்லை. இவ்வாய்வு நூலிற்கு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது கிடைத்தது.

           கடைசியாக 2011 ம் ”ஆண்டு இருட்தேர்” என்ற கவிதைத்தொகுதி வெளியானது... இவை இத்தனையையும் தாண்டி சிந்திக்கின்றபோது ஒரு  விடயம் தெளிவாகத்தெரிகின்றது. அது, அவரின் இலக்கியத் தாற்பரியங்கள் அபரிமிதமானது.

          தன்னை பல விதங்களில் அடையாளப்படுத்திக்கொண்ட கெகிராவ ஸஹானா மேலும் தன் பெயர் மேலோங்கச்செய்வார் என்ற நம்பிக்கையில் பிரிந்து வந்தேன்........

(இவரின் படைப்புக்கள் பற்றி முழுமையான விளக்கங்களோடு மிக விரைவில் சந்திப்போம்)


நேகம பஸான்

Sunday, January 27, 2013

நான் எனும் அவளால்...........

எனக்குள் வாழும்
நான் இறந்துவிட்டேன்
அவளுள் வாழ்வதாய் நினைத்து

நமக்குள் இருப்பது 
காத லென்ற 
நினைவு ............?
காதல் இருப்பது நமக்குள் அல்ல

அழகின் அழிவு......
இதயத்தின் தாலாட்டு......
இம்சிக்கும் இதயத்துடிப்பு .....
அவள் பிரிந்ததால்

எனக்காய் வாழ 
அவளில்லை
நமக்காய் அழ
நானிங்கே....

காதல் தொட்டில்
காற்றில் ஆடுது
சாதல் கண்டும் 
அதுவும் நனையுது


Friday, December 14, 2012

முகநூல் தந்த நற்பால்.....














முன் னறியாத
முகங்கள் அது
முகவரி தெரியாத
முதலனுபவ மது.......

கண்களுக்குள்
கைகள் நடக்கும்
இதயத்திலே
இரவுகள் விடியும்

கவலைகளில்
கால்கள் நனையும்
தவிப்புக்களில்
ஆன்மாக்கள் உருகும்

பொழுதுகள்
இருட்டாய் புலரும்
பூக்களும்
காம்பில் மடியும்

அழுது நான்
ஆனந்தம் காண்கின்றேன்
ஆறுதல் தான்
காணாது போகின்றேன்

முதலாய் நானும்
முகநூல் வந்தேன்
வரவேற்பில் தானும்
கவலை மறந்தேன்

உள்ளத்தை திறந்தே
விட்டேன்
ஆறுதல்கள் கோடி
கண்டு

நண்பர்களில் திணித்துப்போனேன்- நான்
எனை மறந்து சிரிக்கலானேன்
கவிதைகளில் மிதக் கண்டேன் - நான்
காகித்தில் எழுதாமலே

நட்புக் கூடம் முகநூல் தந்தது
நானே வியந்தேன் 
எனக்கா என்று............
பாரில் பறித்த பூக்கள் எல்லாம்
தேரில் ஏற்றித்தந்தது முகநூல்

சிரிக்க நானும்
நாளிகை என்றது
நட்புகள் சிரிடா என்றது
வாரி வாரி இதயம் கசிய
நண்பர்கள் தவழக்கண்டேன்

முகநூல் பார்த்தே
நானும் வளர்ந்தேன்
முழுதாய் தானும்
வளர்ந்தே போனேன்

நன்றி சொல்லி
முடிக்க வில்லை
நலமாய் நானும் 
அமைதி கொள்கின்றேன்


Thursday, December 13, 2012

பாடம்

வாழாதவனுக்கு
வேடிக்கை

வாழ்பவனுக்கு
வாழ்க்கை

வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


உலகப் படம்  வரைதல் கலை மிகப்  பழையது.  பபிலோனியர்,   எகிப்தியர், சீனர்,கிரேக்கர்  என்போர்  இதனை வளர்த்துள்ளனர். முஸ்லிம்களும் இதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

இப்பகுதியில் நிபுணர்களான அறிஞர்கள் வருமாறு:

  • குவாரஸ்மி : இவர் முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவர்களில் ஒருவர்.


  • பல்கி : இவர் முழு உலகத்திற்குமான படமொன்றை வரைந்தார்.

  • மக்திஸி : இவர் உலகப்பட வரைதலில் முதன் முதலில் நிறங்களை அறிமுகப்படுத்தினார்.

  • பிரூனி : வட்ட அமைப்பில் இவர் உலகப்படத்தை வரைந்தார்.

  • இத்ரீஸி : உலகப்பட வரைதலில் மிகப் பிரசித்தி பெற்றவர். ஹி.530இல் நிறங்களைப் பயன்படுத்தி உலகப் படமொன்றை வரைந்தார். முதன் முதலில் வெள்ளி யால் பூகோளமொன்றைச் செய்தவரும் இவரே.



  • ரீஸிபேரி : உஸ்மானியர்களின் கடற் படைத்தளபதி - புவியியல் துறை அறிஞர்      அமெரிக்காவின் படத்தை வரைந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு     பிடிக்க 27 ஆண்டுகளுக்கு முன் இவர் கி.பி. 1465 (ஹி.870) இல் இவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.

மக்திஸி பயன்படுத்திய நிறங்கள்
  • பாதைகள் - சிவப்பு நிறம்
  • மணல் - மஞ்சல் நிறம்
  • கடல் - பச்சை நிறம்
  • ஆறு - நீல நிறம்
  • மலைகள் - மண் நிறம்

இஸ்லாமிய அறிஞர்கள் வரைந்த
உலகப் சில உலகப் படங்கள்


ஜைஹானியின்
(வரைந்த உலகப்படம்)

இத்ரீஸி
(வரைந்த உலகப் படம்)
நன்றிகள் -
https://www.facebook.com/notes/naharwu-islamic-magazine-al-quran-open-college/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-muslim-scholars/336253359753030?ref=nf

Tuesday, December 11, 2012

மூடன் இவன்

மாலைப் பொழுது
மயக்கும் அழகை.....
சேலைக் கிளிகள்
காணக் கூடாதென்றான்....

தாப்பா ளிட்டான்
தாயின் கணவன்
அடித்துச்சொன்னான்
தலை நிமிராதே என்று

உரத்து குரலில்
ஒப்பாரியும் வையாதே.....
சிரத்தைத் தாழ்த்தி
சிந்தை கெட்டு வாழ் என்றான்.....

பசிக்குக் கஞ்சி
பாதி போதுமென்றான்
பாசம் மட்டும் இன்றி
அத்தனையும் பொழிந்தான்

முட்கள் விரிக்கும்  குடைக்குள்ளே
மௌவல் மழை எதிர்பார்த்தாள்
மௌனம் மட்டும் மழையாய்ப்  பொழிய
இவள் தேகம் நனையக் கண்டாள்

சோக நாட்டில்
தனி சாதி இவள்................
கால் கட்டிய
யானை இவள்............

சோலைக் கேசம்
செம்பட்டையாய்......
கீறல் போடும்
முள்ளாய்த் தொடர.........

எழுத்துப் பார்த்தல்
பாவமென்றான்
படித்தல் அது
சாபம் என்றான்

மூலைக்குள் முடங்கச்சொல்லி
பெண் மூளைக்கு விலங்கிட்டான்
அழுகை தேங்கும்
விழிப் பொய்கைக் குள்ளே
குமிழி விடும்  அவளை விற்றான்

ச்சீ....
மூடன் ....
அவள் செய்த தவறேது?
அவன் விழுமியங்கள்
மண்டியிட்டு மரணிக்கட்டும்.....


Monday, December 10, 2012

தாய்

நீ இல்லாத பல நாளிகை 
கண்கள் நனைந்தே போயின...............
உன்னைப் பிரிந்ததற்காய் அல்ல
அருகில் இருக்கும்போது உன் அன்பைப் 
புரியாமல் இருந்தற்காய்...................

மெழுகு

பிறருக்காய் தன்னை
வருத்தும் தந்தை

Sunday, December 9, 2012

மனைவி


வேலிக்குள் வளரும்
வாசமுள்ள ரோஜா

கவிஞனுக்கு....

வரலாறு படைத்தவன்
வாழ்விலக்கிய வித்தகன்
இரத்தினம் ஆன
பதியும் அவனே......
மூ பத்து வருடங்கள்
கவியின் நெருடல்களாய்.....
இயக்கிய தமிழ்
இங்கிலாந்தில் மணக்கிறது....
வானில் பட்டம் நூறு
விட்டவன் .................
வாழ்வில் திட்டம் போட்டு
ஜெயித்தவன் ..........
முல்லை மர   பொளியில்
தீபமாய்த் திளைத்தவன்
முக்கியமாய் கூறுகிறேன
இல்லையது முதிர்வுனக்கு.....

Saturday, December 8, 2012

தென்றல் சஞ்சிகை விமர்சனக் குறிப்பு

தென்றல்




கவிதாயினி ஜான்ஸி கபூர் எழுதிய விமர்சனக் குறிப்பு
http://kavithaini.blogspot.com/2012/12/blog-post_7.html?spref=bl
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!


எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........
என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான் ,விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.


கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்" ,"விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.


"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,
"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.
"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !


" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.
"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...


குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !