முகலாயன் விட்டுச்சென்ற
கடைசி எச்சம்......
மும்தாஜ் இனால் உணரப்படாத
ஸாஜஹானின் இதயம்.....
இமைத் திரைகளுக்குப்பின்னால்
இமைக்காமல் வடித்த
இன்னொரு காதல் சின்னம் இது
அந்த பளிங்குக் கற்களுக்குள்
உறைந்திருக்கும் உன் இதயத்துடிப்பை
யார் அறிவார் ஸாஜஹா?
உலகம் வியக்கும்
இந்த பளிங்கு மாளிகை
கைகளுக்குள் அடக்கி
காம வேட்டைக்கான ஆயுதமாக்கியதை
நீயறியாயோ.....
யமுனையாற்றின்
படுக்கை....
சூரியனின் செம்மொளி- பட்டு
மின்னுது பார் மன்னனின்
மறைமுகைக் கண்ணீர்த்துளிகள்
சிற்பிகள் வடித்தது
மாளிகையல்ல
முகலாயனின் முகத்தில்
உதிர்ந்த காதலை
உலகமறிந்த உன் காதலை
உணராமல் இன்னும்
அவள் கல்லறையில் ...
இது கட்டிடமல்ல
மரணம் எழுதிய
உயிர்ப்பு.....
No comments:
Post a Comment