Friday, December 14, 2012

முகநூல் தந்த நற்பால்.....














முன் னறியாத
முகங்கள் அது
முகவரி தெரியாத
முதலனுபவ மது.......

கண்களுக்குள்
கைகள் நடக்கும்
இதயத்திலே
இரவுகள் விடியும்

கவலைகளில்
கால்கள் நனையும்
தவிப்புக்களில்
ஆன்மாக்கள் உருகும்

பொழுதுகள்
இருட்டாய் புலரும்
பூக்களும்
காம்பில் மடியும்

அழுது நான்
ஆனந்தம் காண்கின்றேன்
ஆறுதல் தான்
காணாது போகின்றேன்

முதலாய் நானும்
முகநூல் வந்தேன்
வரவேற்பில் தானும்
கவலை மறந்தேன்

உள்ளத்தை திறந்தே
விட்டேன்
ஆறுதல்கள் கோடி
கண்டு

நண்பர்களில் திணித்துப்போனேன்- நான்
எனை மறந்து சிரிக்கலானேன்
கவிதைகளில் மிதக் கண்டேன் - நான்
காகித்தில் எழுதாமலே

நட்புக் கூடம் முகநூல் தந்தது
நானே வியந்தேன் 
எனக்கா என்று............
பாரில் பறித்த பூக்கள் எல்லாம்
தேரில் ஏற்றித்தந்தது முகநூல்

சிரிக்க நானும்
நாளிகை என்றது
நட்புகள் சிரிடா என்றது
வாரி வாரி இதயம் கசிய
நண்பர்கள் தவழக்கண்டேன்

முகநூல் பார்த்தே
நானும் வளர்ந்தேன்
முழுதாய் தானும்
வளர்ந்தே போனேன்

நன்றி சொல்லி
முடிக்க வில்லை
நலமாய் நானும் 
அமைதி கொள்கின்றேன்


Thursday, December 13, 2012

பாடம்

வாழாதவனுக்கு
வேடிக்கை

வாழ்பவனுக்கு
வாழ்க்கை

வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


உலகப் படம்  வரைதல் கலை மிகப்  பழையது.  பபிலோனியர்,   எகிப்தியர், சீனர்,கிரேக்கர்  என்போர்  இதனை வளர்த்துள்ளனர். முஸ்லிம்களும் இதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

இப்பகுதியில் நிபுணர்களான அறிஞர்கள் வருமாறு:

  • குவாரஸ்மி : இவர் முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவர்களில் ஒருவர்.


  • பல்கி : இவர் முழு உலகத்திற்குமான படமொன்றை வரைந்தார்.

  • மக்திஸி : இவர் உலகப்பட வரைதலில் முதன் முதலில் நிறங்களை அறிமுகப்படுத்தினார்.

  • பிரூனி : வட்ட அமைப்பில் இவர் உலகப்படத்தை வரைந்தார்.

  • இத்ரீஸி : உலகப்பட வரைதலில் மிகப் பிரசித்தி பெற்றவர். ஹி.530இல் நிறங்களைப் பயன்படுத்தி உலகப் படமொன்றை வரைந்தார். முதன் முதலில் வெள்ளி யால் பூகோளமொன்றைச் செய்தவரும் இவரே.



  • ரீஸிபேரி : உஸ்மானியர்களின் கடற் படைத்தளபதி - புவியியல் துறை அறிஞர்      அமெரிக்காவின் படத்தை வரைந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு     பிடிக்க 27 ஆண்டுகளுக்கு முன் இவர் கி.பி. 1465 (ஹி.870) இல் இவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.

மக்திஸி பயன்படுத்திய நிறங்கள்
  • பாதைகள் - சிவப்பு நிறம்
  • மணல் - மஞ்சல் நிறம்
  • கடல் - பச்சை நிறம்
  • ஆறு - நீல நிறம்
  • மலைகள் - மண் நிறம்

இஸ்லாமிய அறிஞர்கள் வரைந்த
உலகப் சில உலகப் படங்கள்


ஜைஹானியின்
(வரைந்த உலகப்படம்)

இத்ரீஸி
(வரைந்த உலகப் படம்)
நன்றிகள் -
https://www.facebook.com/notes/naharwu-islamic-magazine-al-quran-open-college/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-muslim-scholars/336253359753030?ref=nf

Tuesday, December 11, 2012

மூடன் இவன்

மாலைப் பொழுது
மயக்கும் அழகை.....
சேலைக் கிளிகள்
காணக் கூடாதென்றான்....

தாப்பா ளிட்டான்
தாயின் கணவன்
அடித்துச்சொன்னான்
தலை நிமிராதே என்று

உரத்து குரலில்
ஒப்பாரியும் வையாதே.....
சிரத்தைத் தாழ்த்தி
சிந்தை கெட்டு வாழ் என்றான்.....

பசிக்குக் கஞ்சி
பாதி போதுமென்றான்
பாசம் மட்டும் இன்றி
அத்தனையும் பொழிந்தான்

முட்கள் விரிக்கும்  குடைக்குள்ளே
மௌவல் மழை எதிர்பார்த்தாள்
மௌனம் மட்டும் மழையாய்ப்  பொழிய
இவள் தேகம் நனையக் கண்டாள்

சோக நாட்டில்
தனி சாதி இவள்................
கால் கட்டிய
யானை இவள்............

சோலைக் கேசம்
செம்பட்டையாய்......
கீறல் போடும்
முள்ளாய்த் தொடர.........

எழுத்துப் பார்த்தல்
பாவமென்றான்
படித்தல் அது
சாபம் என்றான்

மூலைக்குள் முடங்கச்சொல்லி
பெண் மூளைக்கு விலங்கிட்டான்
அழுகை தேங்கும்
விழிப் பொய்கைக் குள்ளே
குமிழி விடும்  அவளை விற்றான்

ச்சீ....
மூடன் ....
அவள் செய்த தவறேது?
அவன் விழுமியங்கள்
மண்டியிட்டு மரணிக்கட்டும்.....


Monday, December 10, 2012

தாய்

நீ இல்லாத பல நாளிகை 
கண்கள் நனைந்தே போயின...............
உன்னைப் பிரிந்ததற்காய் அல்ல
அருகில் இருக்கும்போது உன் அன்பைப் 
புரியாமல் இருந்தற்காய்...................

மெழுகு

பிறருக்காய் தன்னை
வருத்தும் தந்தை

Sunday, December 9, 2012

மனைவி


வேலிக்குள் வளரும்
வாசமுள்ள ரோஜா

கவிஞனுக்கு....

வரலாறு படைத்தவன்
வாழ்விலக்கிய வித்தகன்
இரத்தினம் ஆன
பதியும் அவனே......
மூ பத்து வருடங்கள்
கவியின் நெருடல்களாய்.....
இயக்கிய தமிழ்
இங்கிலாந்தில் மணக்கிறது....
வானில் பட்டம் நூறு
விட்டவன் .................
வாழ்வில் திட்டம் போட்டு
ஜெயித்தவன் ..........
முல்லை மர   பொளியில்
தீபமாய்த் திளைத்தவன்
முக்கியமாய் கூறுகிறேன
இல்லையது முதிர்வுனக்கு.....

Saturday, December 8, 2012

தென்றல் சஞ்சிகை விமர்சனக் குறிப்பு

தென்றல்




கவிதாயினி ஜான்ஸி கபூர் எழுதிய விமர்சனக் குறிப்பு
http://kavithaini.blogspot.com/2012/12/blog-post_7.html?spref=bl
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!


எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........
என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான் ,விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.


கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்" ,"விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.


"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,
"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.
"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !


" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.
"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...


குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !

Tuesday, December 4, 2012

வாழும்வரை போராடு

ிிிிிிி  வாழும் வரை போராடு   ிிிிிிி
ிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிி

போராட்டம் தொடங்கி
போகங்கள் நூராயிற்று
போர்வைக்குள் இன்றும்
பூகம்ப அதிர்வுகள்

வாழ்க்கை நிமிடங்கள்
யுகங்களாய்க் கழிந்தது
நிமிட முடிவுளில்
நிசப்தம் வீரிடுகிறது

மௌனிப்புகளின்
மறுபிறவி - என்
போராட்ட வாழ்வின்
தொடக்கப்புள்ளி

கருவறையில்
பிறண்டே இருந்தேனாம்........
பிறக்கும் போதே போராட்டம்
பிறந்த வுடன் பல்கிப்பெருகி........

தாய்ப்பாலே பாதிதான் - எனக்கு
தாயன்பே காணாத பாவி-  நான்
எந்தையோ இல்லை யென்றாகி
வீதிதான் துணைக்கு

காற்றே நிரம்பும் வயிறு
பார்த்தே நிரப்பும் மனது
அடிபட்டு மிதித்தாலும்
அநாதரவு மட்டும் தான்..................

பள்ளி பார்த்தே படித்திட்டேன்
மனக்கணக்கு மதிப்பிட்டேன்
தள்ளுவண்டி நடைபோட்டே
நாகரீகம் பெற்றுவிட்டேன்

கறியோடு சாதம் தான்
ஆடம்பறம் எனக்கன்று
காகிதத்தில் வரைந்து நின்று
வயிறு நிரைய சாப்பிட்டேன்

இராப்பகலா வண்டி
கொண்டு நாற்களையும்
தள்ளியவன் நான்


Sunday, December 2, 2012

துடிக்காமல் நிற்கும் இதயம்

என் மனைவி கண்டு
துடிக்காது நின்றது இதயம்
அவளைக்கண்டு அல்ல
அவனைக்கண்டு