Wednesday, November 21, 2012

காஸாவின் கேட்காத குரல்

காஸாவின் கேட்காத குரல்



கேட்கின்றதா எங்கள் மரண ஓலம்
இதயங்கள் பிளந்து வழியும் இரத்தம்
பாரெங்கும் பரவி வீசுகிறதே
முஸ்லிம்கள் சுவாசத்தினுள்
கலக்கவில்லையா?

சியோனிசப் பயங்கரவாதிகள்
எம் குழந்தைகளைக் கேட்கின்றனர்....
விருட்சமிடும் பிஞ்சுகளின்
என்புகள் சிதறித்துடிக்கின்றது.....

அ.......க்க அராஜகம் முஸ்லிம் நாமத்தின் மேலிருக்க
அட்டூழியம் அவதூறு தான் கொண்டிருக்க
காட்டுமிராண்டியாய் நவீனத்தில் வீட்டிருக்க
உம் சிம்மாசன சொப்பனத்தில் எம் குழந்தைகளா கற்றூண்கள்?

இயந்திரங்கள் குண்டுமழை பொழிகிறது
கொட்டில்களுக்குள் நிசப்தம் கொண்டு
சாக்கடை நீரில் முடமான
முஸ்லிம்கள் பெருமூச்சி விடுகின்றனர்

இருட்டுத்தேங்கிய காஸாவின்
ஆங்காங்கே விழும் மாமிசதின்னிகளின் வெளிச்சங்கள்
அவரகள் வெற்றியின் பக்கமா   நீட்சியாக நிற்கின்றது

பசியில் சுருங்கும் வயிறுகளைப் போல
அந்த பலஸ்தீனம் எல்லை இழக்கிறது
அக்ஸாவின் இருப்புக்காய்
இல்லாதொழிகிறது இன்றைய காஸா

பச்சோந்திப் பார்வை பார்க்கும்
பனியுத்தக்காரர்களே உங்கள் வளங்கொழிந்து
சாக்கடையும் சகதிதடவிய வாழ்வும்
உங்களை சீண்டியே தீரும்

சண்டியன் சூறாவளி அழித்தது போதாதா?
நிபிறு பிரளயம் உங்களைத்தாக்குமடா
இரத்தவெறியர்களே மனிதபிமானமற்ற மக்களே
காஸாவிலும் மனித உயிர்கள் தான் வாழ்கின்றனர்

காஸாவின் குரல் இரத்தங்களுக்குள்
புதையுண்டு குமிழிகளாக வெளிவருகிறது
குரல் காற்றொடு கலந்து போகிறது
கேட்காத குரலாய்