Saturday, November 17, 2012

ஜூலை 23





















ஜூலை 23

கருப்பு ஜூலை
அழிவுகண்ட ஓர்
சரித்திரம் நினைவு
காண்கின்றது

பல வருட அனுபவங்களை
தட்டுகையில்
உயிர்கள் தூசாகிறது
ஜூலை மூன்றாம் தசாப்தம்
மூன்றாம் நாள்
இடி முழங்கியது போல
அனைத்தும்...

நினைக்கையில்
நடு நடுங்குகிறேன்
'உன்வழியில்
நானில்லையே
ஏன் என் வழியில் நீ'
கூறு போட்டு
விற்கப்பட்டோமையா

காயங்கள் தாங்கும்
இதயம்
இதயமே காயமதானது
நிழலும் தூர நிற்கிறது
ஏக்கம் கனைக்கிறது

மனிதம்
சீர் குலைந்துவிட்;டது
மாற்றம் கண்டு விட்டது
ஆதிக்கவாதம்
அனைத்து
அகிம்சைகளையும்
அழித்துவிட்டது

தேடிப்பெற்ற சுதந்திரம்
இன்று தேவைற்றுப்போய்
'கை கொடுக்கப்பேரிருந்தால்
வீழ்வானுக்கேது பயம்'
அவனே வீழ்ந்தால்.......

காகித வடிவில்
சில உரிமைகள்
தனியாய் பயணிக்க
விடிவு வருமா?
சுதந்திரமாய் நடமாட
விடிவு வருமா?

கருப்பு ஜூலை
அனைத்து
மனிதாபிமானத்தையும்
தவிடு பொடியாக்கி
அடக்கு முறையை
சம்பிரதாய பூர்வமாக
துவக்கப்பட்ட நாள்

அழிவு கண்ட
ஒரு சரித்திரம்
நினைவு காண்கிறது

No comments: