வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)
உலகப் படம் வரைதல் கலை மிகப் பழையது. பபிலோனியர், எகிப்தியர், சீனர்,கிரேக்கர் என்போர் இதனை வளர்த்துள்ளனர். முஸ்லிம்களும் இதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.
இப்பகுதியில் நிபுணர்களான அறிஞர்கள் வருமாறு:
- குவாரஸ்மி : இவர் முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவர்களில் ஒருவர்.
- பல்கி : இவர் முழு உலகத்திற்குமான படமொன்றை வரைந்தார்.
- மக்திஸி : இவர் உலகப்பட வரைதலில் முதன் முதலில் நிறங்களை அறிமுகப்படுத்தினார்.
- பிரூனி : வட்ட அமைப்பில் இவர் உலகப்படத்தை வரைந்தார்.
- இத்ரீஸி : உலகப்பட வரைதலில் மிகப் பிரசித்தி பெற்றவர். ஹி.530இல் நிறங்களைப் பயன்படுத்தி உலகப் படமொன்றை வரைந்தார். முதன் முதலில் வெள்ளி யால் பூகோளமொன்றைச் செய்தவரும் இவரே.
- ரீஸிபேரி : உஸ்மானியர்களின் கடற் படைத்தளபதி - புவியியல் துறை அறிஞர் அமெரிக்காவின் படத்தை வரைந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்க 27 ஆண்டுகளுக்கு முன் இவர் கி.பி. 1465 (ஹி.870) இல் இவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.
மக்திஸி பயன்படுத்திய நிறங்கள்
- பாதைகள் - சிவப்பு நிறம்
- மணல் - மஞ்சல் நிறம்
- கடல் - பச்சை நிறம்
- ஆறு - நீல நிறம்
- மலைகள் - மண் நிறம்
இஸ்லாமிய அறிஞர்கள் வரைந்த
உலகப் சில உலகப் படங்கள்
ஜைஹானியின்
(வரைந்த உலகப்படம்)
இத்ரீஸி
(வரைந்த உலகப் படம்)
No comments:
Post a Comment