தாள்களில் வசனமாகாத
இதயத்தின் தவிப்புக்கள் அது ........
வார்த்தைகள் தடுமாறி உறவுகள்
உதறிய சோதனை அது......
நான் யார் என நானே கேட்கின்றேன்
என்னை மறந்த நானே உன்னை நினைக்கின்றேன்
காதல் எனும் பூஞ்சோலையில்
மல்லிகையும் ரோஜாவும் மனக்கிறது
அடிபட்டு அழியப்போவது தெரியாமல்
அழகிய ரோஜா வனம் இன்று
வரண்ட என் இதயம் போல தரிசானது
தண்ணீர் சிந்தும் பொய்கை நடுவே என்
கண்ணீரும் கசிகிறது.......
தணல் பட்ட புழுவா காதல்?
வேதனை வீடா காதல்?
என் இதயவறைதனில் நரம்புகள் கூட அழுகிறது
நீ வாழ்வதை விட செத்துப்போடா என்கின்றது.......
காதல் என் பாதையை மாற்றியது
காதல் என் வயதைக்குறைத்தது
காதல் வாழ்வைப் புதிதாக்கியது......
இன்று என் உயிரைக்குடிக்கிறது......
நாளை..................................................................
நீ சுவாசித்த காற்றை சுவாசித்து
சுருங்கி விரியும் என்
இதயம் துடிக்கமாட்டாது
நீ வரும் தெருவோரம் நிற்கமாட் டேன்
உன் பதிலைக்கேட்டு தூதேதும் அனுப்பமாட்டேன்
என் பெயர் காற்றாய் மறைந்து போகும்
ஆம் நான் போகிறேன் கண்மணியே
தடையில் பட்ட காற்றைப்போல திரும்பி
என் வாழ்க்கை திறப்பைக்கொண்டு
கவிதை தாள் கதவைத்திறந்துபார்
எத்தனை சிற்பமாய் நீ அதில் தெரிகிறாய் என்று
நான் என்ற நானை விட நீ என்ற நானாகவே இருந்தேன்
கனவுகளில் காதல் லயித்துவிட்ட நான்
உன் இன்பமான நினைவுகளை சுமந்து
தனி வழி நிழலாய் உலகம் துறந்து போகிறேன்
நேகம பஸான்
No comments:
Post a Comment