Monday, November 12, 2012

அவள்

அவள்
---------------------------

ஏன் பிறந்தாய்
என மகனை விளித்து
கண்ணீரால் நனைத்து
வினவுகிறரள்

இவள் மனதில்
விதைபோல

விதவை என்ற
வார்த்தைகள்

கூலிக்காய்
வெயிலில் வெந்து
வியர்வை சிந்தி
மரணித்துக்கொண்டிருக்கிறாள்
என்பேனை மையைப்போல

கேவலர் பார்வையில்
சிக்கிய மேனி
சிலிர்க்கிறது...
உத்தமி உயிர்
தள்ளாடுகிறது

வரிகளில் வடிக்கும்
விதியல்ல அவள்
கண்ணீரில் மிதக்கும் பூ

இளவயதில் மணந்தாள்
மணவயதில் இழந்தாள்
அவன் இயற்கை எய்த
இவள் உடம்பின் தகனம்...

போராடிப்பழகியதால்
விரல்களுக்குள் வீணையல்ல
வீணை மீட்டும் விரலானாள்
தவிப்புகளை அடக்கி
கண்களை இடுக்கி
கொஞ்சம் சிரிக்கிறாள்

பாவம் பெண் ஜென்மம்
செய்த தவறேது...?

கேள்விக்குறியான
வாழ்க்கை...
சமூகத்தின் எதிர்ப்பு...
கொடுக்கப்படாத அங்கீகாரம்....
இவள் விதவை விலங்கு
உடைவதெப்போ?

No comments: