நான் போயாகவேண்டும்
----------------------------------
வருந்தி வழியும்- என்
சாகசக் கனவுகள் கல்லில் கரையும்
மழைத்துளி யமிலங்கள்.......................
மனதை் கரைக்க அனுமதி எதற்கு?
பூக்கள் கண்டு மகிழ்ச்சிதான் -எனக்கு
முற்கள் தைப்பதை மறக்கும் போது
காதல் புணர்ச்சி மயக்கம் தான் -எனக்கு
கண்ணீர் அருவியை மறுக்கும் போது
தரிசான என் மனப்பூமியில் - உன்
கண்ணீர் மழை கண்டு வியந்து விட்டேன்
கண்ணீர் கண்டு அல்ல அதில் சிதையும்
உன்னைக் கண்டு - என்
கண்களும் சிதையக்கண்டேன்
கண்களும் சிதையக்கண்டேன்
அவளுக்காய் நான் போராட -அவள்
எனதானவளில்லை
லாடம் இடப்பட்டவள்............
வட்டம் வரைந்து வானத்தைப் பார்ப்பவள்..........
அன்று,
அவள் புன்னகை எங்கள் வீதி விளக்குகள்
இன்று, சாராயக் கணவனின் ஏப்ப நெடிகள்
விலங்கிடப்பட்ட இதயத்தோடு அவள்
என் நெஞ்சத்தில் குடிவருவது வழக்கில்லை
கைக்குழந்தை கழுத்தினில்- அவள்
முந்தானை பிடிக்கும் அடுத்த பிள்ளை
நெருப்பில் வாழ வயிற்றில் ஒன்று
போராட முடியவில்லை
அவளேயிட்ட வரப்புகள் விடவுமில்லை
கனவுகளுக்கு கண்களும் விருப்பமில்லை
தவிடு பொடியான கடந்த காலத்தை நினைத்து
இத்தனையும் கண்டு -நான்
எப்படி வாழ்வேன்? - நீ
என்ற எனை நானாக
மீட்டிக்கொண்டு - நான் போகிறேன்