Wednesday, May 29, 2013

காதல் அநாதை

எனக்குள் உருவாகி
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி

நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி

அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது

வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு

ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........

எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....

ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்

நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்

Wednesday, May 22, 2013

விக்கி பீடியாவிலிருந்து


  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல இருந்தால் பகையும் உறவாம்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
  • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடிக்கிற கைதான் அணைக்கும்!
  • அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
  • அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  • அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
  • அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  • அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
    • இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
    • குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
  • அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
  • அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே
  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  • அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
  • அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  • அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  • அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
==ஆ= 
  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
    • இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
    • ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
  • ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
  • ஆனைப் பசிக்கு சோளப் பொரி
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
  • ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
  • ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
  • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
  • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

Wednesday, May 15, 2013

மனவெளியின் பிரதி




கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் எழுதிய “மனவெளியின் பிரதி“ என்ற கவிதைத்தொகுதி முகப்பு அட்டையே மேலுள்ள படமாகும். இதில் கவிஞர் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான சமூக பின்னூட்டல்களோடும் மதம், மரபு, சம்பிரதாய நேரடித்தாக்கங்களோடும் வரிகளை வடித்து இன்று அதனை உயிர்பெறச்செய்துள்ளார்.  கவிஞர் மேமன் கவியின் ஈடுபாடும் கவிஞர்களுக்கிடையிலான கவியொற்றுமையும் தெளிவாகிறது இந்த தொகுப்பிலிருந்து. முன் அட்டை வடிவமைப்பாளரும் அவரே. கொடகே சகோதரர்களால் இப்புத்தகம் வெளியிடப்படுகின்றமை மிக முக்கிய அம்சமாகும். வெகு விரைவில் வாசகர்கள் கைகளிற்கு இப்புத்தகம் கிடைக்கப்பெறும்........

Sunday, May 12, 2013

தாஜ்மகால்...



முகலாயன் விட்டுச்சென்ற 
கடைசி எச்சம்......
மும்தாஜ் இனால் உணரப்படாத
ஸாஜஹானின் இதயம்.....

இமைத் திரைகளுக்குப்பின்னால்
இமைக்காமல் வடித்த 
இன்னொரு காதல் சின்னம் இது

அந்த பளிங்குக் கற்களுக்குள்
உறைந்திருக்கும் உன் இதயத்துடிப்பை
யார் அறிவார் ஸாஜஹா?

உலகம் வியக்கும் 
இந்த பளிங்கு மாளிகை
கைகளுக்குள் அடக்கி
காம வேட்டைக்கான ஆயுதமாக்கியதை 
நீயறியாயோ.....

யமுனையாற்றின்
படுக்கை....
சூரியனின் செம்மொளி- பட்டு
மின்னுது பார் மன்னனின்
மறைமுகைக் கண்ணீர்த்துளிகள்

சிற்பிகள் வடித்தது
மாளிகையல்ல
முகலாயனின் முகத்தில் 
உதிர்ந்த காதலை

உலகமறிந்த உன் காதலை 
உணராமல் இன்னும்
அவள்  கல்லறையில் ...


இது கட்டிடமல்ல
மரணம் எழுதிய
உயிர்ப்பு.....

Sunday, May 5, 2013

நேகம பஸான்: மனிதம் எங்கே?

நேகம பஸான்: மனிதம் எங்கே?: நீ மனிதன் என நான் உணரும் தருணம் மனிதம் தொலைந்துவிட்டது..... இருள் கலைந்து ஒளிபிறக்குமென ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது பு...

மனிதம் எங்கே?



நீ மனிதன் என நான் உணரும் தருணம்
மனிதம் தொலைந்துவிட்டது.....
இருள் கலைந்து ஒளிபிறக்குமென
ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது
புலராமல் மறைந்துவிட்டது....

எத்தனை தலைகள் தலைமைகள்?
அத்துணை விலைகள் அவர்களுக்கு
செத்தனை கொன்றுதான் புகழாரம்  அவர்களுக்கு
இங்கு எத்தனை எத்தனை உதிரமுறைந்திருக்கு

வாள் பேச்சிப் பேசியே நீ
வாய்ப்பூட்டாய் ஆனாய் நீ
தாய் மறைந்த துயரிலே
இன்னும் மீளாமல் ஆனாய் நீ

சவால்கள் விட்டவன் நீ
சாதித்துக் காட்டியவன் நீ
சாகடிக்க நினைத்தபோதும்
சாக்கடை நிதியில் புரழாதவன் நீ

நீ மேதையல்ல ஆனால்
எங்களுக்கு மேலானவன்
பண போதையுமல்ல நீ
பாச மிகு தலைவன் நீ

இன்னொரு அஷ்ரப் ஆனாய் நீ
பின்னொரு காலம் உனக்காய ஆகும் பார்
என்றொரு எண்ணம் உள்ளது எனக்குள்
திண்ணமது என  உள்ளேன் திடமாய் நானும்

ஜனநாயகம் இங்கே மலிந்து விட்டது
தனியாளும் இங்கே உலகாழும் என்னறாகிவிட்டது
தொட்டது தானும் பொன்னாகனும் இங்கே
நாங்கள் நட்டது கூட அழிந்தாகனும் அவர்களுக்கு

ஏழை மழைச்சாரலிலே நனைந்தால் போதுமெமக்கு
பனிமழைப் பந்தலிலே உறங்கனுமாம்     தலைகள்
பார் நாம் வெல்லும் காலம் வரும்
சிந்தும் கண்ணீர் கடலாய் மாறும்

வாழ்த்துகிறேன் சாலியே
திடமாய் இரு
மீதமுள்ள மனிதங்கள்
எப்போதும் உன் கூடவிருக்கும்

                                                                                       -------------நேகம பஸான்-----------------