Showing posts with label ஏனையவை..... Show all posts
Showing posts with label ஏனையவை..... Show all posts

Wednesday, May 22, 2013

விக்கி பீடியாவிலிருந்து


  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல இருந்தால் பகையும் உறவாம்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
  • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடிக்கிற கைதான் அணைக்கும்!
  • அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
  • அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  • அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
  • அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  • அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
    • இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
    • குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
  • அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
  • அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே
  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  • அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
  • அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  • அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  • அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
==ஆ= 
  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
    • இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
    • ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
  • ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
  • ஆனைப் பசிக்கு சோளப் பொரி
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
  • ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
  • ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
  • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
  • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

Thursday, December 13, 2012

வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


வரைபடம் பற்றி அறிந்து கொள்வோமா? (Muslim Scholars)


உலகப் படம்  வரைதல் கலை மிகப்  பழையது.  பபிலோனியர்,   எகிப்தியர், சீனர்,கிரேக்கர்  என்போர்  இதனை வளர்த்துள்ளனர். முஸ்லிம்களும் இதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.

இப்பகுதியில் நிபுணர்களான அறிஞர்கள் வருமாறு:

  • குவாரஸ்மி : இவர் முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவர்களில் ஒருவர்.


  • பல்கி : இவர் முழு உலகத்திற்குமான படமொன்றை வரைந்தார்.

  • மக்திஸி : இவர் உலகப்பட வரைதலில் முதன் முதலில் நிறங்களை அறிமுகப்படுத்தினார்.

  • பிரூனி : வட்ட அமைப்பில் இவர் உலகப்படத்தை வரைந்தார்.

  • இத்ரீஸி : உலகப்பட வரைதலில் மிகப் பிரசித்தி பெற்றவர். ஹி.530இல் நிறங்களைப் பயன்படுத்தி உலகப் படமொன்றை வரைந்தார். முதன் முதலில் வெள்ளி யால் பூகோளமொன்றைச் செய்தவரும் இவரே.



  • ரீஸிபேரி : உஸ்மானியர்களின் கடற் படைத்தளபதி - புவியியல் துறை அறிஞர்      அமெரிக்காவின் படத்தை வரைந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு     பிடிக்க 27 ஆண்டுகளுக்கு முன் இவர் கி.பி. 1465 (ஹி.870) இல் இவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.

மக்திஸி பயன்படுத்திய நிறங்கள்
  • பாதைகள் - சிவப்பு நிறம்
  • மணல் - மஞ்சல் நிறம்
  • கடல் - பச்சை நிறம்
  • ஆறு - நீல நிறம்
  • மலைகள் - மண் நிறம்

இஸ்லாமிய அறிஞர்கள் வரைந்த
உலகப் சில உலகப் படங்கள்


ஜைஹானியின்
(வரைந்த உலகப்படம்)

இத்ரீஸி
(வரைந்த உலகப் படம்)
நன்றிகள் -
https://www.facebook.com/notes/naharwu-islamic-magazine-al-quran-open-college/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-muslim-scholars/336253359753030?ref=nf

Saturday, December 8, 2012

தென்றல் சஞ்சிகை விமர்சனக் குறிப்பு

தென்றல்




கவிதாயினி ஜான்ஸி கபூர் எழுதிய விமர்சனக் குறிப்பு
http://kavithaini.blogspot.com/2012/12/blog-post_7.html?spref=bl
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!


எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........
என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான் ,விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.


கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்" ,"விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.


"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,
"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.
"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !


" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.
"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...


குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !

Saturday, November 17, 2012

அநுராதபுரத்தின் அடையாளம் பத்திரிகை

அநுராதபுரம் சிறுபான்மைச் சமூகம்.
எல். வஸீம் அக்ரம்



அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 71 386 முஸ்லிம் மக்கள் வாழ்வதாக அண்மையில் செய்யப்பட்ட குடிசன மதிப்பீடு தெரிவிக்கின்றது. இது சுமார் 8.3 வீத சனத்தொகையாக கருதப்படுகின்றது. ,த்துடன் சுமார் 3391 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்கின்ற முஸ்லிம் இருப்பு, சமூக பொருளாதார அபிவிருத்திகள் இன்றைய கால கட்டத்தில் மிக ,ன்றியமையாத ஒன்றாக ,ருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களைவிட சமகாலத்தில் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்து அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு ஏற்ற கட்டமைப்புக்ளை வகுத்துக் கொள்வது இன்றைய போராட்டமாகவே கொள்ள வேண்டும்.
அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் ,ருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் ,ருக்கின்றார்கள் என்ற ஆய்வு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 33 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 1000 - 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவதில்லை.
இப்பிரதேச சிறுபான்மைச் சமூகங்களின் ,ருப்பை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு சம்பவங்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் இடம் பெற்றுள்ளதை வரலாற்றுத் தகவல்கள் சான்றுபடுத்தியுள்ளன.
அநுராதபுர மாவட்டத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மைச் சமூகத்துடன் சமூக பொருளாதார கல்வி விடயங்களில் ,னக்கத்துடனும் சகவாழ்வுடனும் ,ருந்துள்ளதனை அவதானிக்கலாம்.
,ந்த ,ருப்பை குலைக்கும் வண்ணம் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்கும் போது கவலையாக உள்ளது.
1. முஸ்லிம்களின் சமூகத்துள் நிலவுகின்ற நுண்தன்மையான பிரதேச முரண்பாடுகள்
2. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவுகின்ற சமய அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள்.
 3. ஏனைய சமூகங்களின் ,னச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.
இவ்வாறான அடிப்படைக் காரணங்கள் அநுராதபுர மாவட்ட சிறுபான்மை மக்களின் இருப்பை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினையாக அல்லது சவாலாக அடையாளம் காணலாம். அநுராதபுரத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் பிரதேச பிரிவுகளால் தூர்ந்த நிலையில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் குவியப் படுத்திய சமூக அமைப்பாக அன்றி பெரிய இடைவெளி மிக்க நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதானது, ,ந்த மக்களின் கலை இலக்கிய, கல்வி, சமூக, சமய, பொருளாதார, அரசியல் விடயங்களில் ஒருமைத்துவ நிலையை அடைவதில் தடையாக உள்ளது.
அநுராதபுர சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியானது சற்று ஆறுதல் அளிக்கும் வண்ணம் ,ருக்கின்றது. ,ருப்பினும் அதனூடான சமூகத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி வெளிப்பாடுகள் போதாமையைக் காட்டுவதாக சில அவதானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு மேற்சொன்ன காரணங்கள் பின்னூட்டலாய் அமைகின்றன. எனவே எதிர்கால சமூகத்தின் நலன் கருதி அநுராதபுர சிறுபான்மைச் சமூகங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உசிதமான ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்பது எமது அவா.


  1. தோற்றுப் போய்விட்டேன்
    என நீ
    நினைக்கும் ஒவ்வொரு
    சந்தர்ப்பமும் நீ வென்றுவிட்டாய்
    என்றே அது அர்த்தப்படுகின்றது

Tuesday, November 13, 2012

புவியியல் நூல் வெளிவந்துவிட்டது.





பஸான் அப்துல் அஸீஸ் எழுதிய புவியியல் நூல் வெளிவந்துவிட்டது.


தரம் 06 மாணவர்களுக்கான பயிற்சி நூல் மிகவும் சிறப்பாகவும் மாணவர்வகளுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்களின் புவியியல் தன்னார்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் தாமாகவே கற்கக்கூடிய விதத்திலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தகம் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்.
Price- 100/=
தொடர்புகளுக்கு,
0777074959
அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளி எரிப்பு


அநுராதபுரம் மல்வத்து ஓயா அருகிலுள்ள தக்கியாப் பள்ளி வாசல் (மதரசா) இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு தகர்க்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம் பெற்றதுடன் பிரதேச மற்றும் தேசிய அரசியல்வாதிகள் பலரின் கவனம் அநுராதபுர நகரின் மீது விழுந்துள்ளதை கடந்தவார ஊடகச் செய்திகள் சான்று உரைத்துள்ளன.
இதன் புனரமைப்புக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரூ. 5 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளார். இந்நிதி இதன் புனரமைப்புக்கு பயன்படும் ஜூம்மாப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.